2025 ஆம் ஆண்டு ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெற்ற பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், அடிக்கடி இடையூறுகளும் ஒத்தி வைப்புகளும் பதிவானது.
மக்களவையானது அதன் திட்டமிடப்பட்ட நேரத்தில் 29 சதவீதம் மட்டுமே செயல்பட்ட அதே நேரத்தில் மாநிலங்களவை வெறும் 34 சதவீதம் மட்டுமே செயல்பட்டது.
இது 18வது மக்களவையில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த செயல்திறன் ஆகும் என்பதோடு இதற்கு பெரும்பாலும் தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் தடை பட்ட நடவடிக்கைகள் ஆகியவையே காரணமாகும்.
மக்களவையில் கேள்வி நேரத்தின் 23 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது என்ற நிலைமையில் மாநிலங்களவையில் வெறும் 6 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது.
கூட்டத் தொடரின் போது மாநிலங்களவையில் 12 நாட்களும், மக்களவையில் ஏழு நாட்களும் வாய்மொழி பதில்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
2025 ஆம் ஆண்டு வருமான வரி மசோதா, தேர்வுக் குழுவின் அறிக்கைக்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டு, அதே நாளில் அதற்குப் பதிலாக புதிய மசோதா நிறைவேற்றப் பட்டது.
சிந்தூர் நடவடிக்கை அவற்றின் மொத்த நேரத்தின் பெரும்பகுதியாக மக்களவையில் 19 மணி நேரமும், மாநிலங்களவையில் 16 மணி நேரமும் விவாதிக்கப்பட்டது.
18வது மக்களவை உருவாக்கப்பட்டதிலிருந்து மக்களவை அதன் துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதோடு மேலும் இதற்கு முந்தைய 17வது மக்களவையிலும் ஐந்து ஆண்டுகளாக துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட வில்லை.