TNPSC Thervupettagam

பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் முதல் கார்பன் வரவுகள்

June 14 , 2026 15 hrs 0 min 29 0
  • மியான்மரில் உள்ள ஒரு தூய்மையான சமையல் திட்டத்திற்காக பாரிஸ் ஒப்பந்தத்தின் சரத்து 6.4-இன் கீழ் ஐக்கிய நாடுகள் சபை முதன்முறையாக கார்பன் வரவுகளை வழங்கியுள்ளது.
  • கார்பன் வரவு என்பது ஒரு மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடு (CO) அல்லது அதற்கு சமமான பசுமை இல்ல வாயுக்களைக் குறைத்தல், தவிர்த்தல் அல்லது அகற்றுவதைக் குறிக்கும் வர்த்தகம் செய்யக்கூடிய சான்றிதழாகும்.
  • மியான்மரில் உள்ள இத்திட்டம் பாரம்பரிய விறகு அடுப்புகளை மாற்றி தூய்மையான சமையல் அடுப்புகளை விநியோகிக்கிறது, இது உமிழ்வு மற்றும் காடழிப்பைக் குறைக்கிறது.
  • இத்திட்டம் மியான்மர் (புரவலர் நாடு) மற்றும் கொரியா குடியரசு (தென் கொரியா) ஆகிய நாடுகளை உள்ளடக்கியது, இது சரத்து 6.4 மேற்பார்வைக் குழுவின் கண்காணிப்புடன் நடைபெறுகிறது.
  • வரவுகளின் ஒரு பகுதி தென் கொரியாவின் உமிழ்வு வர்த்தகக் கடமைகளுக்காக மாற்றப்படும், அதே சமயம் மீதமுள்ள வரவுகள் மியான்மரின் தேசிய அளவில் தீர்மானிக்கப் பட்ட பங்களிப்புகளை (NDCs) ஆதரிக்கின்றன.
  • இந்த வழிமுறையானது, அதிக ஒருமைப்பாடு கொண்ட கார்பன் சந்தைகள், சர்வதேச பருவநிலை நிதி மற்றும் மேம்பட்ட சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற நிலையான வளர்ச்சி நன்மைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்