TNPSC Thervupettagam
January 2 , 2018 2699 days 1386 0
  • சூரியனினுடைய வெளிப்புற வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்கான பார்கர் சோலார் ஆய்வுகலனை (Parker Solar Probe) 2018-ல் விண்ணில் செலுத்த நாசா திட்டமிட்டுள்ளது.
  • ஏழாண்டு கால அளவிலான தன் பயணத்தில் விண்வெளியின் ஏழு வழி பயண நிலைகளை கடந்து (Fly bys) வெள்ளி கோளினுடைய ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி படிப்படியாக சூரியனுக்கு அருகில் தன் சுற்றுப் பாதையை அமைத்து சூரியனின் வெளியடுக்கை இது ஆய்வு செய்யும்.
  • தீவிரமான வெப்பமும், சூரியனின் சோலார் கதிர் வீச்சும் (Solar radiation) நிறைந்த அபாயகரமான பகுதிகளில் பார்கர் ஆய்வுகலனானது அறிவியல் பூர்வ சோதனைகளை மேற்கொள்ள உள்ளது.

 

  • சூரியனினுடைய வளிமண்டலத்தின் வெளியடுக்கின் (Solar Carona) மூலமாக எவ்வாறு ஆற்றலும், வெப்பமும் நகர்வுறுகின்றன என்பதைக் கண்டறிவதும், சூரியனின் ஆற்றல் துகள்களையும் (Solar Energentic Particles), மற்றும் சூரியக் காற்று நிகழ்வுகளையும் (Solar WindS) எவை முடுக்குகின்றன (accelerate) என்பதை ஆராய்வதுமே இத்திட்டத்தின் முதன்மை நோக்கங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்