TNPSC Thervupettagam

பார்ச்சூன் நிறுவனத்தின் உலகின் 500 முன்னணி நிறுவனங்களுக்கான 2022 ஆம் ஆண்டு பட்டியலில் இந்திய நிறுவனங்கள்

August 7 , 2022 1078 days 444 0
  • பார்ச்சூன் நிறுவனத்தின் உலகின் 500 முன்னணி நிறுவனங்களுக்கான 2022 ஆம் ஆண்டு பட்டியலில் 9 இந்தியப் பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இடம் பெற்று உள்ளன.
  • இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமானது இப்பட்டியலில் 98வது இடத்தில் உள்ளது.
  • இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமானது முதல் முறையாக இந்தப் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளது.
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமானது (104வது இடம்) தொடர்ந்து 19வது ஆண்டாக இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
  • இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்ற இந்திய நிறுவனங்கள்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (142), ONGC (190), SBI (236), பாரத் பெட்ரோலியம் (295) டாடா மோட்டார்ஸ் (370), டாடா ஸ்டீல் (435) மற்றும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் (437) ஆகியனவாகும்.
  • அமெரிக்காவின் வால்மார்ட் என்ற நிறுவனமானது தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • 1995 ஆம் ஆண்டு முதல், 17வது முறையாக தனது முதல் இடத்தை இந்த நிறுவனம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்