அசாமில் உள்ள போபிடோரா வனவிலங்கு சரணாலயம் ஆனது அதன் புல்வெளிகளில் இருந்து பார்த்தீனியம் களைச் செடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கையினைத் தொடங்கியது.
பார்த்தீனியம் ஹிஸ்டெரோபோரஸ் என்பது 70 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து கலப்பு செய்யப்பட கோதுமை இறக்குமதி மூலம் இந்தியாவிற்குள் நுழைந்ததாக கருதப்படும் ஓர் அயல் தாவரமாகும்.
இந்தத் தாவரமானது பல்லுயிர்ப் பெருக்கத்தை அச்சுறுத்துவதோடு, தோல் ஒவ்வாமை மற்றும் காய்ச்சல் போன்ற சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்பதோடு மேலும் காண்டாமிருகங்களுக்கான உணவாக உள்ள புற்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது.