TNPSC Thervupettagam
December 2 , 2021 1447 days 726 0
  • பிரிட்டிஷ் காலனி நாடாக மாறி சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு, பார்படாஸ் ஒரு குடியரசு நாடாக உருவெடுத்துள்ளது.
  • கரீபியத் தீவு நாடான பார்படாஸ், அரசி இரண்டாம் எலிசபெத் அவர்களை தனது நாட்டின் அரசின் தலைமை என்றப் பதவியிலிருந்து நீக்கியுள்ளது.
  • டேம் சான்ட்ரா புருனெல்லா மேசன் என்பவர் பார்படாஸ் நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றார்.
  • பார்படாஸ் நாடானது, ஆங்கிலேயர்களால் அடிமைச் சமுதாயம் கொண்ட ஒரு நாடாக மாற்றப் பட்டதாகக் கூறப்படுகிறது.
  • இது முதன்முதலில் 1625 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் காலனி (குடியேற்றம்) பகுதியாக மாறியது.
  • 1966 ஆம் ஆண்டில் இந்த நாடு சுதந்திரம் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்