பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினம் - நவம்பர் 29
November 30 , 2022 1037 days 426 0
அமைதியான முறையிலான பாலஸ்தீன-இஸ்ரேல் தீர்மானத்தை ஊக்குவிப்பதோடு, பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அதிகளவு விழிப்பு உணர்வைப் பரப்புவதையும் இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
1947 ஆம் ஆண்டில் இத்தினத்தன்று பாலஸ்தீனப் பிரிவினை குறித்தத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக் கொண்டது.
இன்று 4.75 மில்லியன் பாலஸ்தீனியர்கள் காசா பகுதி மற்றும் மேற்குக் கரையில் பரவிக் காணப்படுகின்றனர்.