ஐ.நா. பெண்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறை (UN DESA) ஆகியவை 2025 ஆம் ஆண்டு பாலினம் குறித்த அறிக்கையை வெளியிட்டன.
டிஜிட்டல் பிரிவுகளில் உள்ள பாலினம் சார்ந்த பிளவை நீக்குவது, 2050 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை 1.5 டிரில்லியன் டாலர்கள் உயர்த்தும் மற்றும் 30 மில்லியன் பெண்களை வறுமையிலிருந்து விடுவிக்கும் என்பதை இது வலியுறுத்துகிறது.
பெண்கள் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பள்ளிப் படிப்பினை நிறைவு செய்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பதோடு மேலும் 2000 முதல் 2023 ஆம் ஆண்டு வரை பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு கிட்டத்தட்ட 40% குறைந்துள்ளது.
துணையினரின் வன்முறைக்கு எதிரான விரிவான நடவடிக்கைகளைக் கொண்ட நாடுகள் பலவீனமான பாதுகாப்புகளைக் கொண்ட நாடுகளை விட 2.5 மடங்கு குறைவாக விகிதங்களைக் கொண்டுள்ளன.
பருவநிலைப் பேச்சுவார்த்தைகளில் பெண்களின் தலைமை சமீபத்திய ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 99 புதிய அல்லது சீர்திருத்தப்பட்ட சட்டங்கள் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டைக் குறைத்துள்ளன.
676 மில்லியன் பெண்கள் மற்றும் சிறுமிகள் கொடிய மோதல்கள் நடைபெறும் இடங்களுக்கு அருகில் வாழ்கின்றனர் என்ற நிலையில் இது 1990 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பதிவான மிக அதிக எண்ணிக்கையாகும் என்பதோடு மேலும் 2024 ஆம் ஆண்டில் ஆண்களை விட அதிகமாக சுமார் 64 மில்லியன் பெண்கள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டனர்.
துரிதப்படுத்தப்பட்ட நடவடிக்கை எதுவும் இல்லாமல், 2030 ஆம் ஆண்டிற்குள் பாலினச் சமத்துவம் குறித்த 5வது நிலையான மேம்பாட்டு இலக்கின் கீழ் உள்ள அனைத்து இலக்குகளையும் உலக நாடுகள் பூர்த்தி செய்ய இயலாமல் மாறும்.