பாலியல் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்திற்கான உலக தினம் - மார்ச் 04
March 11 , 2023 935 days 304 0
இந்தத் தினமானது முதன்முதலில் 2009 ஆம் ஆண்டில் ஓர் உலகளாவிய இயக்கமாக அனுசரிக்கப் பட்டது.
இந்தத் தினமானது, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கடத்தல் பற்றிய குழப்பம் மிக்க நிதர்சனத்தினைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்கும், இந்தக் கொடூரமானக் குற்றங்களுக்கு எதிராக போராடுவதற்கு வேண்டி தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் அனுசரிக்கப் படுகிறது.
பாலியல் சுரண்டலுக்கு உள்ளானவர்களின் உரிமைகளை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தல் போன்றவற்றை இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒரு நாளின் ஒவ்வொரு வினாடியிலும் சராசரியாக எட்டு பேர் பாலியல் சுரண்டல், கடத்தல் மற்றும் அடிமைப் படுத்துதல் ஆகிய சர்வதேசக் குற்றவியல் வலை அமைப்புகளில் சிக்கியுள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது, ஜூலை 30 ஆம் தேதியினை ஆள் கடத்தலுக்கு எதிரான உலக தினமாகக் குறிப்பிடுகிறது.