TNPSC Thervupettagam

பாலியா கோதுமை

July 11 , 2021 1448 days 545 0
  • புவிசார் குறியீடு பெற்ற பாலியா வகை கோதுமை அடங்கிய முதல் சரக்குப் பெட்டகமானது கென்யா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு குஜராத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
  • இந்த வகை கோதுமையில் புரதச்சத்து நிறைந்துள்ளதோடு, இது மிகுந்த இனிப்புச் சுவையையும் கொண்டுள்ளது.
  • இந்த வகை கோதுமையானது பெரும்பாலும் குஜராத்தின் பால் (Bhal) எனும் பகுதியில் பயிரிடப் படுகிறது.
  • இந்தப் பயிரானது நீர்ப்பாசன வசதியின்றி மழைநீரைக் கொண்டு குஜராத்தில் சுமார் 2 லட்சம் ஹெக்டேர் அளவிலான வேளாண் நிலத்தில் பயிரிடப்படுகிறது.
  • பாலியா வகை கோதுமைக்கு 2011 ஆம் ஆண்டு ஜூலையில் புவிசார் குறியீடு வழங்கப் பட்டது.
  • புவிசார் குறியீட்டிற்காக பதிவு செய்த அதன் உரிமையாளர் குஜராத்திலுள்ள ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்