சமீபத்தில் இராஜஸ்தான் காவல் துறையானது ராணுவ நுண்ணறிவுத் தகவல்களின் அடிப்படையில் ஜெய்ப்பூரில் 2 குடிமக்கள் பாதுகாப்புப் பணியாளர்களைக் கைது செய்துள்ளது.
இந்தத் தகவல்கள் பாலைவனத் துரத்தல் நடவடிக்கை என்பதின் கீழ் பெறப் பட்டுள்ளன.
இது 2019 ஆம் ஆண்டில் ராணுவ நுண்ணறிவுப் பிரிவினால் தொடங்கப்பட்ட ஒரு உளவு எதிர்ப்பு நடவடிக்கையாகும்.
இவர்கள் அலுவல்சார் ரகசியச் சட்டம், 1923 என்ற சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளனர்.
துபாக் நடவடிக்கை என்பது, பாகிஸ்தானின் ISI (Inter-Service Intelligence – பணிகளுக்கு இடையேயான நுண்ணறிவு) என்ற அமைப்பால் தொடங்கப்பட்ட ஒரு ராணுவ நுண்ணறிவு நடவடிக்கையாகும்.
இந்த நடவடிக்கையானது இந்தியாவைச் சிதைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.