செவ்வாய் கிரகத்தில் எதிர்கால உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவக் கூடிய சின்திரிச்சியா கானினெர்விஸ் என்ற பாலைவனப் பாசியை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தப் பாசி கடுமையான நீரில்லா நிலை, உறைபனி வெப்பநிலை மற்றும் அதிக கதிர்வீச்சையும் தாங்கி உயிர்வாழும் திறன் கொண்டது.
இது தனது உடலில் உள்ள பெரும்பாலான நீரை இழந்தாலும், செயலற்ற நிலைக்குச் சென்று, மீண்டும் ஈரப்பதம் கிடைக்கும்போது மிக விரைவாக ஒளிச்சேர்க்கையைத் தொடங்கும்.
செவ்வாய்க் கிரகம் போன்ற சூழலில் நடத்தப்பட்ட சோதனைகளில், குறைந்த அழுத்தம் மற்றும் அதிக கார்பன் டை ஆக்சைடு அளவிலும் இது பிழைத்து மற்றும் மீண்டும் வளரும் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.
இது -196°C வரையிலான கடும் குளிர் மற்றும் மிக அதிக அளவிலான கதிர்வீச்சையும் தாங்கும் வலிமை கொண்டது.