TNPSC Thervupettagam

பால்டால்-ஜோஜிலா பகுதியில் பனிச் சிறுத்தை

November 14 , 2022 1014 days 438 0
  • காஷ்மீரில் பால்டால்-ஜோஜிலா பகுதியில் பனிச் சிறுத்தை இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
  • பால்டால்-ஜோஜிலா பகுதியில் இருந்து பனிச்சிறுத்தை இருப்பது கண்டறியப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
  • பனிச் சிறுத்தை கணக்கெடுப்பானது, இந்தியாவின் பனிச்சிறுத்தை எண்ணிக்கை மதிப்பீட்டின் ஒரு பகுதியாகும்.
  • ஒளிப்படக் கருவிகள் மூலமான கண்காணிப்புப் பயிற்சிகள் இந்தியாவின் வடக்குப் பகுதியின் உயர் நிலைப் பகுதியில் உள்ள ஆசிய ஐபெக்ஸ் மலையாடுகள் பழுப்பு நிற கரடி மற்றும் காஷ்மீர் கஸ்தூரி மான் போன்ற இதர முக்கியமான மற்றும் அரிய வகை உயிரினங்கள் அங்குக் காணப்படுவது குறித்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
  • இந்தியாவின் பனிச்சிறுத்தை மீதான எண்ணிக்கை கணக்கெடுப்பானது இதுவரை இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நிறைவடைந்து உள்ளது.
  • இந்த பெரிய பூனை இனத்தின் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையானது, இந்த இரண்டு மாநிலங்களிலும் முறையே 50 மற்றும் 100 ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்