NCERT ஆனது அதன் 65வது ஸ்தாபன நாளில் 35 என்ற ஊடக எண் கொண்ட பால் வாடிகா PM இ-வித்யா DTH ஊடகத்தினை அறிமுகப்படுத்தியது.
இந்த ஊடகமானது, 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகள், ஆசிரியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஒலி ஒளிக் காட்சி உள்ளடக்கத்தை வழங்குகிறது.
2020 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கையின் படி, குழந்தைப் பருவத்தில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை மேம்படுத்துவதே இதன் இலக்காகும்.
NCERT ஆனது 12 மொழிகளில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் மற்றும் கற்றல் கருவிகளுடன் DIKSHA 2.0 உரையாடு மென்பொருள் தளத்தினை அறிமுகப்படுத்தியது.
மாற்றுத்திறனாளிகள் பரிசோதனைக்கான PRASHAST 2.0 மற்றும் டிஜிட்டல் கற்றலுக்கான PM eVidya கைபேசி செயலி ஆகியவை பிற முக்கிய வெளியீடுகளில் அடங்கும்.