இந்தியாவில் குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதற்கான பால் விவாஹ் முக்த் பாரத் பிரச்சாரம் அடைந்துள்ள முன்னேற்றங்களை அரசு எடுத்துரைத்தது.
இந்தியாவை குழந்தை திருமணமில்லாத நாடாக மாற்றுவதற்காக, அரசு மற்றும் சமூகப் பங்களிப்புடன் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று இந்தப் பிரச்சாரம் தொடங்கப் பட்டது.
குழந்தைத் திருமண வழக்குகள் குறித்த விழிப்புணர்வையும் புகாரளிப்பதையும் அதிகரிக்க, இந்த முன்னெடுப்பின் கீழ் 100 நாட்கள் சிறப்பு பிரச்சாரம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 4 அன்று தொடங்கியது.
குழந்தை திருமணத் தடைச் சட்டம் (PCMA) மற்றும் குழந்தை மற்றும் இளம் பருவத்தினர் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் ஆகியவை குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர் முறையைத் தடை செய்கின்றன.
குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாநில அரசுகளால் குழந்தை திருமணத் தடுப்பு அலுவலர்கள் (CMPOs) நியமிக்கப் படுகின்றனர்.
குழந்தை உதவி எண் 1098, குழந்தை திருமணம் தொடர்பான வழக்குகள் உட்பட துயரத்தில் உள்ள குழந்தைகளுக்காக 24x7 கட்டணமில்லா அவசர சேவையை வழங்குகிறது.