மத்தியக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பள்ளிகளுக்கான ‘பாஷா சங்கம் முன்னெடுப்பு’, ‘பாஷா சங்கம் செயலி’ மற்றும் ‘ஏக் பாரத் ஷ்ரேஷ்தா பாரத்’ விநாடி-வினா செயலி ஆகியவற்றை வெளியிட்டார்.
2020 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கையின் செயல்பாட்டு நிரல்களின்படி, மாணவர்கள் தங்கள் தாய்மொழியினைத் தவிர்த்து இதர இந்திய மொழிகளிலும் அடிப்படையான உரையாடல் புலமையைப் பெறச்செய்வதே இதன் நோக்கமாகும்.
இது ‘ராஷ்டிரிய ஏக்தா திவாஸ்’ என்ற நிகழ்வின் போது தொடங்கப்பட்டது.