TNPSC Thervupettagam

பாஸ் அக் ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பு

August 16 , 2025 15 hrs 0 min 9 0
  • பஞ்சாப் அரசானது, ஆளில்லா விமானங்கள் மூலமான போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலைத் தடுக்க இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மூன்று பாஸ் அக் (Hawk Eye) ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகளை நிலைநிறுத்தியுள்ளது.
  • இந்த அமைப்புகள் ஆனது, எல்லைப் பாதுகாப்புப் படையுடன் (BSF) இரண்டாம் நிலை பாதுகாப்பு அமைப்பாக பதான்கோட்டிலிருந்து ஃபாசில்கா வரை நிறுவப்படும்.
  • 2024 ஆம் ஆண்டில், பஞ்சாப் அரசானது ஹெராயின், ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை ஏற்றிச் சென்ற 283 ஆளில்லா விமானங்களைக் கைப்பற்றியதோடு மேலும் 2025 ஆம் ஆண்டில் இதுவரை 137 ஆளில்லா விமானங்கள் கைப்பற்றப் பட்டு உள்ளன.
  • இந்த அமைப்பானது, நேரடிக் கண்காணிப்பு இல்லாமல் அதிகாரிகளை உடனடியாக எச்சரிக்கிறது மற்றும் மேலும் இது BSF, இந்திய விமானப்படை மற்றும் இந்திய இராணுவத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்