TNPSC Thervupettagam

பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் மறுசீரமைப்பு

September 22 , 2026 12 days 138 0
  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மற்றும் வனத்துறை இணைந்து கடலூர் மாவட்டம் பிச்சாவரத்தில் ₹1.97 கோடி செலவில் 25 ஹெக்டேர் பரப்பளவில் புதிய சதுப்புநிலக் (மாங்குரோவ்) காடுகளை உருவாக்கியுள்ளன.
  • சதுப்புநிலக் காடுகள் என்பவை உப்பைத் தாங்கக்கூடிய கடலோரத் தாவரங்கள் ஆகும். இவை கடற்கரைகளை அரிப்பு, புயல்கள் மற்றும் பேரலைகளிலிருந்து பாதுகாப்பதுடன், மீன்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதுகாப்பான வாழ்விடங்களையும் வழங்குகின்றன, மேலும் கார்பனைச் சேமிக்கவும் உதவுகின்றன.
  • வனத்துறை நாற்றங்காலில் 75,000-க்கும் மேற்பட்ட ரைசோஃபோரா அபிகுலாட்டா (Rhizophora apiculata) மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு திருத்தப்பட்ட மீன்-எலும்பு முறையில் நடப் பட்டன.
  • கிழக்கு கடற்கரை சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை (NH)-332A விரிவாக்கத்தின் போது ஏற்படும் சதுப்புநில இழப்பை ஈடுகட்ட இந்த மர வளர்ப்பு திட்டமிடப்பட்டது; மரக்காணம் முகத்துவாரத்தில் ஏற்பட்ட உண்மையான சேதம் 0.15 ஹெக்டேர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் மட்டுமே என்ற அளவிற்கு குறைக்கப்பட்டது.
  • செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பொருத்தமான நிலம் கிடைக்காததை அடுத்து, பிச்சாவரம் சதுப்புநிலப் பகுதியில் வண்டல்முனை, எம்.ஜி.ஆர் திட்டு மற்றும் கொட்டுமுனை ஆகிய மூன்று இடங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்