TNPSC Thervupettagam

பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளில் தேனீ வளர்ப்பு

July 8 , 2026 16 hrs 0 min 20 0
  • இருளர் பழங்குடியின சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, கடலூரில் உள்ள பிச்சாவரம் சதுப்பு நிலங்களில் தேனீ வளர்ப்பு முன்னெடுப்பைத் தமிழ்நாடு வனத்துறை தொடங்கியுள்ளது.
  • இது பருவநிலை நெகிழ்வுத்தன்மை கொண்ட கிராமம் (CRV) முன்னெடுப்பின் கீழ், சூழலியல் சுற்றுலா மேலாண்மைக் குழுவின் (ETMC) மூலம் செயல்படுத்தப்படுகிறது.
  • இத்திட்டத்திற்கு TRIBES திட்டத்தின் கீழ் தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD) ₹25.37 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.
  • இத்திட்டம் "பிச்சாவரம் மாங்குரோவ் தேன்" என்ற வணிகப் பெயரின் கீழ் அறிவியல் பூர்வமான தேனீ வளர்ப்பு, தேன் பதப்படுத்துதல், தரக்குறியீடு செய்தல் மற்றும் சந்தைப் படுத்துதல் ஆகிய பயிற்சிகளை உள்ளடக்கியது.
  • இந்த முன்னெடுப்பானது மகரந்தச் சேர்க்கையை அதிகரிக்கும், இயற்கையான சதுப்புநில மீளுருவாக்கத்திற்கு ஆதரவளிக்கும், பல்லுயிரினத்தை வலுப்படுத்தும் மற்றும் ராம்சார் பட்டியலில் உள்ள பிச்சாவரம் சதுப்புநிலச் சூழலமைப்பின் சுற்றுச் சூழல் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்