TNPSC Thervupettagam

பிஜியில் எச்.ஐ.வி பரவல்

August 20 , 2026 5 days 45 0
  • உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மனித நோயெதிர்ப்புச் சக்தி குறைபாடு வைரஸ் (HIV) பாதிப்புகளில் ஒன்றை பிஜி நாடு எதிர்கொண்டுள்ளது.
  • வயது வந்தோரிடையே எச்.ஐ.வி பாதிப்பு 1.6 சதவீதத்தை எட்டியுள்ளது, மேலும் எச்.ஐ.வியுடன் வாழும் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே தங்களது பாதிப்பு நிலையை அறிந்துள்ளனர்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் மும்மடங்காக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது, அதேவேளையில் போதைப்பொருள் பயன்பாடு, ஊசிகளைப் பகிர்ந்து கொள்வது மற்றும் சமூகக் களங்கம் ஆகியவை இந்த நோய் பரவலுடன் தொடர்புடைய முக்கிய காரணிகளாக உள்ளன.
  • பிஜி நாடு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எச்.ஐ.வி பரவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், தேசிய எச்.ஐ.வி பரவல் தடுப்பு சிறப்பு அதிரடிப்படையையும் அமைத்துள்ளது.
  • பிஜி நாடு எச்.ஐ.வி முன்காப்பு சிகிச்சை (PrEP) முறையை விரிவுபடுத்துகிறது, மேலும் உலகளாவிய நிதியத்தின் (Global Fund) மூலம் லெனகாபவிர் (Lenacapavir) என்ற நீண்ட காலம் செயல்படக் கூடிய ஊசி மூலம் செலுத்தப்படும் எச்.ஐ.வி தடுப்பு மருந்தை பெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்