TNPSC Thervupettagam

பின்லாந்தின் அணுக்கழிவு பெட்டகம்

April 26 , 2026 5 days 62 0
  • உலகின் முதல் நிரந்தர அணுக்கழிவு சேமிப்பு கிடங்கை செயல்பாட்டுக்கு கொண்டு வர பின்லாந்து தயாராகி வருகிறது.
  • 'ஆன்கலோ' என்று அழைக்கப்படும் இந்த வசதி, ஓல்கிலுவோடோ (Olkiluoto) தீவில் அமைந்துள்ளது.
  • இது பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை 100,000 ஆண்டுகள் வரை சேமித்து வைக்கும்.
  • இது பல்-அடுக்கு பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி (உலோக குப்பிகள், செப்பு குப்பிகள், பெண்டோனைட் களிமண், பாறை அடுக்குகள்) நிலையான அடித்தளத்தில் 400-450 மீட்டர் நிலத்தடியில் கட்டப்பட்டுள்ளது.
  • பெண்டோனைட் களிமண் தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது விரிவடந்து, கதிரியக்கப் பொருள் கசிவதைத் தடுக்கிறது.
  • இந்த சேமிப்பு கிடங்கு செயலற்றநிலை பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதாவது மனித பராமரிப்பு இல்லாமலேயே இது பாதுகாப்பாக இருக்கும்.
  • உலகளவில் பாதுகாப்பாகவும் நீண்டகால அடிப்படையிலும் கழிவுகளை அகற்றுவதற்கான ஒரு மாதிரியை வழங்கும் வகையில் சுமார் 6,500 டன் அணுக் கழிவுகளை சேமிக்க பின்லாந்து திட்டமிட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்