டாக்காவில் உள்ள வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான (பிம்ஸ்டெக்) செயலகம் ஜூன் 6, 2022 அன்று தமது 25வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.
இது 1996 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி பாங்காக் பிரகடனத்தில் கையெழுத்து இட்டதன் மூலம் உருவானது.
பிம்ஸ்டெக் சாசனத்தின் கையொப்பம் மார்ச் 30, 2022 அன்று கொழும்பில் நடைபெற்ற ஐந்தாவது உச்சி மாநாட்டின் போது செய்யப் பட்டது.
இதன் தலைமையகம் பங்களாதேஷின் டாக்காவில் அமைந்துள்ளது.
வங்காள தேசம், பூடான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகியவை பிம்ஸ்டெக் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.