பிம்ஸ்டெக் அமைப்பில் உள்ள நாடுகளுக்கான காலநிலை சார்ந்த நவீன (திறன்மிகு) வேளாண் முறைகள் குறித்த சர்வதேசக் கருத்தரங்கு
December 14 , 2019 1986 days 646 0
பிம்ஸ்டெக் அமைப்பில் உள்ள நாடுகளுக்கான காலநிலை சார்ந்த நவீன (திறன்மிகு) வேளாண் முறைகள் குறித்த சர்வதேசக் கருத்தரங்கானது புது தில்லியில் தொடங்கி இருக்கின்றது.
இது மத்திய வேளாண் & விவசாயிகள் நலத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றம் (Indian Council of Agricultural Research - ICAR) ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கருத்தரங்கானது காலநிலை மாற்றத்திற்கு உகந்த வெப்பமண்டல குறு நில விவசாய முறையை மேம்படுத்துவதையும் அதிக உற்பத்தித் திறனை அளிப்பதையும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
காலநிலை சார்ந்த திறன்மிகு விவசாயத்திற்கான உலகளாவிய கூட்டணியின் கருத்தரங்கானது உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் (FAO - Food and Agriculture Organization) நடத்தப் பட்டது.
BIMSTEC பற்றி
பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation - BIMSTEC) என்பது பூடான், வங்க தேசம், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய ஏழு உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு பிராந்திய அமைப்பாகும்.
இந்தத் துணைப் பிராந்திய அமைப்பானது 1997 ஆம் ஆண்டில் பாங்காக் பிரகடனத்தின் மூலம் நடைமுறைக்கு வந்தது.