தூய்மை இந்தியா திட்டம்-நகர்ப்புறம் 2.0 (Swachh Bharat Mission–Urban 2.0) திட்டத்தின் கீழ் 24 மாநிலங்களில் உள்ள 50 மாதிரி நகரங்களை உருவாக்குவதற்காக பிரகதி-50 (PRAGATI-50) என்ற முன்னெடுப்பு 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று புது தில்லியில் தொடங்கப்பட்டது.
பிரகதி-50 என்பது முக்கிய செயல்பாட்டுக் காட்டி (KPI) அடிப்படையிலான கண்காணிப்பின் மூலம் நகர்ப்புற தூய்மை, திடக்கழிவு மேலாண்மை, பயன்படுத்தப் பட்ட நீர் மேலாண்மை, சுகாதாரம் மற்றும் குடிமக்கள் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தலைநகரங்கள், கலாச்சார மையங்கள், புனிதத் தலங்கள், சுற்றுலா மையங்கள் மற்றும் பொருளாதார மையங்கள் ஆகியவை அடங்கும், இவை மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தூய்மையான முன்மாதிரியாகச் செயல்படுகின்றன.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (MoHUA) இந்த முன்னெடுப்பைச் செயல்படுத்தும், மேலும் மத்திய அமைச்சர் தலைமையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும்.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு நகரங்கள் ஆக்ரா, அயோத்தி, லக்னோ, மதுரா-பிருந்தாவனம், பிரயாக்ராஜ் மற்றும் வாரணாசி ஆகியவையாகும்.