மத்திய அரசானது நாட்டின் புனித யாத்திரை மற்றும் பாரம்பரிய தளங்களை மேம்படுத்துவதற்காக கீழ்க்காணும் தளங்களை புனித யாத்திரை புனரமைப்பு மற்றும் பாரம்பரிய மேம்பாட்டு இயக்கத்தின் (Pilgrimage Rejuvenation and Spiritual Heritage Augmentation Drive - PRASAD) கீழ் இணைத்துள்ளது.
உத்திரகாண்டின் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி
மத்தியப் பிரதேசத்தின் அமர்கண்டாக்
ஜார்க்கண்ட்டின் பராஸ்நாத்
இந்த புதிய சேர்க்கையுடன் பிரசாத் திட்டத்தின் கீழ் உள்ள தளங்களின் எண்ணிக்கையானது 25 மாநிலங்களிலிருந்து 41 என்ற அளவை எட்டியுள்ளது.
இது மத்திய சுற்றுலா அமைச்சகத்தினால் 2014-15ல் தொடங்கப்பட்டது.
இது அடையாளம் காணப்பட்ட புனித யாத்திரை தளங்களின் மேம்பாடு மற்றும் அழகுபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.