மத்திய கல்வி அமைச்சகத்தின் (MoE) கீழ் உள்ள உயர்கல்வித் துறையானது, பிரதமரின் ஆராய்ச்சி இருக்கை (PMRC) திட்டம் 2026 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களைத் தொடங்கியுள்ளது.
PMRC என்பது முன்னணி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், ஆய்வகங்கள் மற்றும் தொழில்நுட்பத் தொழில்களில் பணிபுரியும் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்களை ஈர்ப்பதற்கான ஒரு தேசிய திறமைவாய்ந்தோர் - தாயகம் திரும்புதல் திட்டமாகும்.
இத்திட்டம் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள உயர்கல்வித் துறையால் செயல்படுத்தப் படுகிறது.
இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை வலுப்படுத்துவதற்காக உலகத் தரம் வாய்ந்த அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை மீண்டும் தாயகம் அழைத்து வருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டமானது இளம் ஆராய்ச்சி உறுப்பினர்கள், மூத்த ஆராய்ச்சி உறுப்பினர்கள் மற்றும் ஆராய்ச்சி இருக்கைகள் என மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.