இது கர்ப்பிணிப் பெண்கள், பிறந்த குழந்தைகள், சிறார்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் (18 வயது வரை) ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வைக் கண்காணிப்பதற்கான ஒரு குடும்ப-மைய டிஜிட்டல் தளமாகும்.
இது பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய கவனிப்பு, நோய்த்தடுப்பு, ஊட்டச்சத்து, வளர்ச்சி, பள்ளியில் சேருதல் மற்றும் வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியம் ஆகியவற்றை நிகழ்நேரத்தில் கண்காணிக்க வழிவகை செய்கிறது.
இந்தத் தளமானது டிஜிட்டல் சுகாதாரக் கடவுச்சீட்டுகள், தகவல் பலகைகள் மற்றும் தவறவிடப்பட்ட தடுப்பூசிகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்கான தானியங்கி எச்சரிக்கைகளை உள்ளடக்கியது.
சேவை வழங்கலை மேம்படுத்தவும், தரவுகள் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப் படுவதைக் குறைக்கவும் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் கல்வித் தரவு தளங்களின் தரவுகளை இது ஒருங்கிணைக்கிறது.