பிரதான் மந்திரி அன்னதாதா ஆய் சன்ராக்ஷன் அபியான் (PM - AASHA)
September 13 , 2018 2502 days 1771 0
புதிய தலைமைத் திட்டமான “பிரதான் மந்திரி அன்னதாதா ஆய் சன்ராக்சன் அபியான்” திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது (PM - AASHA - Pradhan Mantri Annadata Aay Sanrakshan Abhiyan).
இத்திட்டத்தின் நோக்கம் 2018ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளவாறு விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கு ஏற்ற விலையை உறுதி செய்வதாகும்.
இந்தத் தலைமைத் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஏற்ற விலையை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறை அடங்கியுள்ளது. அவையாவன
விலை ஆதாரத் திட்டம்
விலை பற்றாக்குறை பண வழங்கீடு திட்டம்
தனியார் கொள்முதல் மற்றும் இருப்பிற்கான சோதனைத் திட்டம்
மத்திய உணவு மற்றும் பொது வழங்கீடுகள் துறை (DFPD - Department of food and Public Distribution) மற்றும் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் பருத்தி மற்றும் சணல் ஆகியவற்றிற்கு ஆதரவு விலை அளிப்பதற்கான மற்ற திட்டங்கள் தொடரும் என்று மத்திய அமைச்சரவை அறிவித்துள்ளது.