வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) / (Pradhan Mantri Awas Yojana - Urban) என்ற திட்டத்தின்கீழ் நகர்ப்புற ஏழைகளின் நன்மைக்காக கூடுதலாக 4,78,670 விலை மலிவான வீடுகளைக் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது.
இந்த ஒப்புதல் மத்திய ஒப்புதலளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 42-வது கூட்டத்தின் போது வழங்கப்பட்டது.
தற்சமயம் இத்திட்டத்தின்கீழ் ஒட்டுமொத்தமாக ஒப்புதலளிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 72,65,763.