பிரதான் மந்திரி இராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது 2024
December 29 , 2024 259 days 403 0
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், ஏழு பிரிவுகளில் 17 குழந்தைகளுக்கு பிரதமரின் தேசிய விருதினை வழங்கினார்.
கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய ஏழு முதன்மைப் பிரிவுகளில் மேற்கொள்ளப் பட்ட மிக அசாதாரணச் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த விருதினைப் பெறுபவதற்கு ஏழு சிறுவர்கள் மற்றும் 10 சிறுமிகள்-14 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த சிந்தூர ராஜா (15) நடுக்குவாதம் உள்ள நோயாளிகளுக்கு சுய நிலைப்பாட்டுச் சாதனங்களை உருவாக்கியதற்காக இந்த விருதினைப் பெற்றார்.
செங்கல்பட்டைச் சேர்ந்த கர்நாடக இசைப் பிரிவு மாணவரான ஜனனி நாராயணன் (14) என்பவரும் இந்த விருதைப் பெற்றுள்ளார்.
2023-24 ஆம் ஆண்டில் தமிழக அரசினால் நிறுவப் பட்ட கலைமாமணி விருதையும் இவர் பெற்றுள்ளார்.