பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டம் – இலக்கு நிறைவேற்றம்
August 5 , 2018 2696 days 976 0
மத்திய அரசு, பிரதான் மந்திரி உஜ்வாலாத் திட்டத்தின் (Pradhan Mantri Ujjawala Yojana - PMUY) கீழ் ஏறக்குறைய 8 மாதங்களுக்கு முன்பாகவே (35 மாதங்களுக்குப் பதில் 27 மாதங்களில்) 5 கோடி இலவச எல்பிஜி இணைப்புகள் அளிக்கும் இலக்கினை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஏறக்குறைய 65 சதவிகித இணைப்புகளை அளித்துள்ள 6 மாநிலங்கள் உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், மத்தியப் பிரதேசம் ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகியவையாகும்.
ஒட்டு மொத்த பயனாளிகளில் ஏறக்குறைய 47 சதவிகிதத்தினர் சமூகத்தில் எஸ்சி/எஸ்டி போன்ற பின்தங்கிய வகுப்பினர் ஆவர்.
நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இறப்புகளுக்கு காரணமாக உள்ள வீட்டினுள் ஏற்படும் உட்புற காற்று மாசுவை தீர்க்க அரசு எடுத்துள்ள ஒரு சரியான நடவடிக்கையாக இத்திட்டம் (PMUY) உள்ளதென்று உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்து இருக்கின்றது.