திட்டம் தொடங்கப்பட்ட தினத்திலிருந்து (1/5/2016) இது நாள் வரையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகத்தினால் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழு கோடி LPG இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பங்களுக்கு வைப்புத் தொகை அல்லாத LPG இணைப்புகள் வழங்கப்படுகின்றன.
குடும்பத்தில் உள்ள 18 வயதை நிரம்பிய பெண் உறுப்பினர்களின் பெயரில் இந்த LPG இணைப்புகள் வழங்கப்படுகின்றன.