- 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்திற்கான பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் மூன்றாம் தவணைத் தொகையான ரூ. 12,000 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
பிரதான் மந்திரி கிசான் திட்டம் பற்றி:
- பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்பது இந்திய அரசின் 100% நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ஒரு மத்திய அரசுத் திட்டமாகும்.
- இது 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டது.
- இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும் வருமான நிதி உதவியாக ஆண்டுக்கு ரூ. 6000 என்ற அளவில் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒரு முறையாக மூன்று தவணைகளில் (ஒரு தவணை - ரூ 2000) வழங்கப் படுகின்றது.
- இந்தத் திட்டத்தின் பயனாளிகளான விவசாயக் குடும்பங்களை அடையாளம் காண்பதற்கான முழுப் பொறுப்பும் மாநில/ஒன்றியப் பிரதேச அரசாங்கங்களிடமே உள்ளது.
- இந்த திட்டமானது மத்திய வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தினால் செயல்படுத்தப் படுகின்றது.
கிருஷி கர்மான் விருதுகள் பற்றி
- உணவு தானிய உற்பத்தியில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு கிருஷி கர்மான் விருதுகள் வழங்கப் படுகின்றன.
- இந்த விருதானது மத்திய வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தினால் 2010-11ல் ஏற்படுத்தப் பட்டது.