பிரதான் மந்திரி ஜீ - வன் யோஜனா (ஜய்வ் இந்தன் – வாட்டாவரன் அனுகோல் பசல் அவாசேஷ் நிவாரண் / Jaiv Indhan- Vatavaran Anukool fasal awashesh Nivaran) என்ற திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவானது ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டமானது லிக்னோசெல்லுலோசிக் உயிர்திரள் மற்றும் மற்றொரு புதுப்பிக்கத்தக்க தட்டுத் தீவனம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒருங்கிணைக்கப்பட்ட உயிரி எத்தனால் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டமானது இரண்டாம் தலைமுறை எத்தனால் துறையை ஊக்குவிப்பதின் மீது கவனத்தைச் செலுத்துகிறது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகமானது (MoP&NG - Ministry of Petroleum & Natural Gas) 2022 ஆம் ஆண்டில் பெட்ரோலில் எத்தனாலின் கலவை 10 சதவிகிதத்தை அடைவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.
MoP&NG அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப நிறுவனமான உயிரித் தொழில்நுட்ப மையமானது இத்திட்டத்தினை செயல்படுத்தும் மையமாக விளங்கும்.
இந்திய அரசாங்கமானது 2003 ஆம் ஆண்டில் “எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் திட்டத்தைத்” தொடங்கியது.
இரண்டாம் தலைமுறை எத்தனால் என்றும் அழைக்கப்படும் செல்லுலோசிக் எத்தனால் என்பது ஸ்டார்ச் அல்லது சர்க்கரையிலிருந்து தயாரிக்கப் படுவதில்லை. மாறாக தாவரங்களின் செல் சுவர்களில் அபரிதமாக காணப்படும் செல்லுலோஸ் நார்களிலிருந்து அவை உற்பத்தி செய்யப் படுகின்றது.