TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா

September 14 , 2020 1321 days 1142 0
  • பிரதமர் டிஜிட்டல் முறையில் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா மற்றும் இ-கோபாலா செயலி ஆகியவற்றை அறிமுகப்படுத்தி வைத்தார்.
  • பீகாரில் சீதாமாரியில் மீன் அடைகாக்கும் வங்கி, கிஷன்கஞ்சில் நீர்வாழ்வு நோய்கள் பரிந்துரை ஆய்வகம் (Aquatic Disease Referral) ஆகியவற்றை நிறுவுவதையும் அவர் அறிவித்தார்.

நோக்கங்கள்

  • இந்தியாவில் மீன்வளத்தின் நிலையான வளர்ச்சி.
  • 2024-25 ஆண்டு வாக்கில் மீன் உற்பத்தியை 70 லட்சம் டன்னாக உயர்த்துதல்.
  • மீன்வளத் துறையில் மீன்பிடித்தலுக்குப் பிந்தைய இழப்புகளை 10% ஆகக் குறைத்தல்

இ-கோபாலா செயலி

  • இது மீன்வளர்ப்போரின் நேரடி பயன்பாட்டிற்கான இன மேம்பாட்டுச் சந்தை மற்றும் தகவல் தளம் போன்றவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இது மீன் வளர்ப்போர் கால்நடைகளை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்க உதவும்.
  • இந்தச் செயலியின் மூலம் அவர்கள் நோய் இல்லாத ஜெர்ம் பிளாசத்தை (germplasm – முளைமக் கூழ்) வாங்கலாம் மற்றும் விற்கலாம்.
  • மேலும், கால்நடைகளுக்கான முதலுதவி, செயற்கைக் கருவூட்டல் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றிற்கான தரமான இனப்பெருக்கச் சேவைகள் கிடைக்குமா என்பதையும் இவர்கள் அறியலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்