பிரதான மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் எனப்படும் அனைவருக்குமான வீட்டு வசதித் திட்டத்தினை 2024 ஆம் ஆண்டு மார்ச் வரையில் நீட்டிப்பதற்கு வேண்டி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான நிலவரப்படி, கட்டி முடிக்கப்படாத 155.75 லட்சம் வீடுகளைக் கட்டி முடிக்க இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படும்.
இத்திட்டத்தை 2024 ஆம் ஆண்டு மார்ச் வரையில் நீட்டிப்பதன் மூலம், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 2.95 கோடி வீடுகள் என்ற இலக்கின் வரம்பில் மீதமுள்ளக் குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்ட உதவிகள் வழங்கப் படும்.
இது கிராமப்புறப் பகுதிகளில் அனைவருக்கும் வீடு என்ற ஒரு இலக்கை அடைய உதவுகிறது.