நேபாள நாட்டு உச்ச நீதிமன்றமானது அந்நாட்டின் கலைக்கப்பட்ட பிரதிநிதிகள் அவையை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.
2020 ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று நேபாள நாட்டு அதிபர் பித்யா தேவி பந்தாரி அவர்கள் பிரதிநிதிகள் அவையைக் கலைத்ததைத் தொடர்ந்து, அந்நாடு அரசியல் பிரச்சினையைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
மேலும் அவர் அந்நாட்டில் தேர்தலானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 மற்றும் மே 10 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.