இந்தியப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவை (Economic Advisory Council to the Prime Minister - PMEAC) மத்திய அரசு திருத்தியமைத்துள்ளது.
இது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அடுத்த இரண்டு ஆண்டு காலத்திற்கு செயல்பட இருக்கின்றது.
திருத்தியமைக்கப்பட்ட PMEACன் தலைவராக டாக்டர் பிபெக் தெப்ராயும் உறுப்பினர் செயலாளராக ரத்தன் பி வாட்டலும் தொடர்ந்து நீடிப்பர்.
இக்குழுவில் உள்ள 2 பகுதி நேர உறுப்பினர்களான ரத்தின் ராய் மற்றும் ஷாமிகா ரவி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
இதுபற்றி
PMEAC என்பது இந்திய அரசிற்கு அதிலும் குறிப்பாக இந்தியப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சாராத நிரந்தரமற்ற ஒரு தனிச் சுதந்திர அமைப்பாகும்.
PMEAC ஆனது ஒரு தலைவரால் தலைமை தாங்கப்படுகின்றது. இது புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
PMEACன் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கை குறித்து எந்தவொரு வரையறையும் வரையறுக்கப் படவில்லை.