லக்னோவில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாதுகாப்புத் தொழில்துறை உற்பத்தி மண்டலத்தில் பிரம்மோஸ் எறிகணை உற்பத்திப் பிரிவானது அதிகாரப் பூர்வமாகத் திறக்கப் பட்டுள்ளது.
இந்த மையத்தின் இலக்கானது, ஆண்டுதோறும் சுமார் 80 முதல் 100 எறிகணைகளை உற்பத்தி செய்வதாகும்.
பிரம்மோஸ் எறிகணையானது, உலகின் வேகமான மீயொலி சீர்வேக எறிகணைகளில் ஒன்றாகும்.
290 முதல் 400 கிலோ மீட்டர் தூரம் வரையிலும், மேக் 2.8 என்ற அதிகபட்ச வேகத்திலும் இயங்கும் இந்த எறிகணையை நிலம், கடல் மற்றும் வான்வழியில் இருந்து ஏவ முடியும்.