TNPSC Thervupettagam

பிரம்மோஸ் எறிகணை ஏற்றுமதி 2026

November 16 , 2026 4 days 83 0
  • இந்தியா பிலிப்பைன்ஸுக்கு பிரம்மோஸ் எறிகணைகளை வழங்கியுள்ளதுடன், வியட்நாமுடன் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் கையெழுத்திட்ட ஏற்றுமதி ஒப்பந்தத்தின் மூலம் பிரம்மோஸ் எறிகணை அமைப்பை வாங்கிய முதல் வெளிநாட்டு வாடிக்கையாளராக பிலிப்பைன்ஸ் ஆனது.
  • பிரம்மோஸ் என்பது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் ரஷ்யாவின் NPO மாஷினோஸ்ட்ரோயெனியா (NPOM) ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு மீயொலி வேகச் சீர் எறிகணையாகும்.
  • இது சுமார் மேக் 2.8 (Mach 2.8) வேகத்தில் பயணிக்கக்கூடியது மற்றும் நிலம், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் Su-30MKI உள்ளிட்ட விமானங்களிலிருந்தும் ஏவப்படலாம்.
  • பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்பது 1998 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியா–ரஷ்யா கூட்டு நிறுவனமாகும்; இதன் பெயர் பிரம்மபுத்திரா (இந்தியா) மற்றும் மோஸ்க்வா (ரஷ்யா) ஆகிய நதிகளின் பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்