பிராண்ட் ஃபைனான்ஸ் 2022 – உலகின் முன்னணி 500 தயாரிப்புகள் அறிக்கை
January 30 , 2022
1235 days
554
- ஆப்பிள் நிறுவனமானது 2022 ஆம் ஆண்டிலும் மிகவும் மதிப்பு மிக்க ஒரு நிறுவனமாக தனது நிலையைத் தக்க வைத்துள்ளது.
- 2022 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு 355.1 பில்லியன் டாலராக, கடந்த ஆண்டை விட 35% அதிகமான அளவில், மதிப்பிடப் பட்டது..
- பிராண்ட் ஃபைனான்ஸ் உலகின் முன்னணி 500 தயாரிப்புகள் தரவரிசையில் இது வரை பதிவான அதிகபட்ச மதிப்பீடு இதுவே ஆகும்.
- டிக்டாக் நிறுவனமானது இந்தப் பட்டியலில் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனமாக இடம் பெற்றுள்ளது.
- தொழில்நுட்பத் துறையானது, துறைகள் சார்பில் மிக மதிப்புமிக்க தொழில்துறையாக இடம் பெற்றுள்ளது.
- இதனையடுத்து சில்லறை வணிகம், வங்கி, ஊடகம் மற்றும் தொலைத் தொடர்பு ஆகியவை முறையே முதல் 5 இடங்களைப் பெற்றுள்ளன.
- இந்திய நிறுவனமான டாடா குழுமம் இந்தியா மற்றும் தெற்கு ஆசியப் பகுதிகளில் மிகவும் மதிப்பு மிக்க ஒரு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
- முதல் 100 இடங்களில் இடம் பெற்ற ஒரே இந்திய நிறுவனம் இதுவாகும்.
- உலகளவில் டாடா குழுமத்தின் தரவரிசை 78 ஆகும்.

Post Views:
554