TNPSC Thervupettagam

பிராந்தியங்களுக்கு இடையேயான மின் பரிமாற்றத் திறன் விரிவாக்கம்

March 25 , 2026 2 days 52 0
  • தேசிய மின் கட்டமைப்பை வலுப்படுத்த இந்தியாவின் பிராந்தியங்களுக்கு இடையேயான மின் பரிமாற்றத் திறன் 2027 ஆம் ஆண்டிற்குள் 143 ஜிகாவாட் (GW) எட்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டில் சுமார் 120 ஜிகாவாட்டாக இருந்த திறன், சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய 2027 ஆம் ஆண்டில் 143 ஜிகாவாட்டாகவும், 2032 ஆம் ஆண்டில் 168 ஜிகாவாட்டாகவும் விரிவுபடுத்தப்படும்.
  • இந்த விரிவாக்கம் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை ஒருங்கிணைக்கவும் தேசிய மின்சாரத் திட்டத்தின் (NEP) ஒரு பகுதி ஆகும்.
  • இந்தியாவின் அதிகபட்ச மின் தேவை 2032 ஆம் ஆண்டில் சுமார் 388 ஜிகாவாட்டை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்ற நிலையில் இதற்கு வலுவான மின் பரிமாற்றக் கட்டமைப்பு தேவைப்படுகிறது.
  • இந்தத் திட்டம் மின் பரிமாற்றப் பாதைகளை 6.48 லட்சம் மின்சுற்று/சர்க்யூட் கிலோ மீட்டராக (ckm) அதிகரிப்பதையும், மின் மாற்றும் திறனை சுமார் 2,345 ஜிகா வோல்ட் ஆம்பியராகவும் (GVA) உயர்த்துவதையும் உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்