பிராந்தியங்களுக்கு இடையேயான மின் பரிமாற்றத் திறன் விரிவாக்கம்
March 25 , 2026 2 days 51 0
தேசிய மின் கட்டமைப்பை வலுப்படுத்த இந்தியாவின் பிராந்தியங்களுக்கு இடையேயான மின் பரிமாற்றத் திறன் 2027 ஆம் ஆண்டிற்குள் 143 ஜிகாவாட் (GW) எட்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் சுமார் 120 ஜிகாவாட்டாக இருந்த திறன், சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய 2027 ஆம் ஆண்டில் 143 ஜிகாவாட்டாகவும், 2032 ஆம் ஆண்டில் 168 ஜிகாவாட்டாகவும் விரிவுபடுத்தப்படும்.
இந்த விரிவாக்கம் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை ஒருங்கிணைக்கவும் தேசிய மின்சாரத் திட்டத்தின் (NEP) ஒரு பகுதி ஆகும்.
இந்தியாவின் அதிகபட்ச மின் தேவை 2032 ஆம் ஆண்டில் சுமார் 388 ஜிகாவாட்டை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்ற நிலையில்இதற்கு வலுவான மின் பரிமாற்றக் கட்டமைப்பு தேவைப்படுகிறது.
இந்தத் திட்டம் மின் பரிமாற்றப் பாதைகளை 6.48 லட்சம் மின்சுற்று/சர்க்யூட் கிலோ மீட்டராக (ckm) அதிகரிப்பதையும், மின் மாற்றும் திறனை சுமார் 2,345 ஜிகா வோல்ட் ஆம்பியராகவும் (GVA) உயர்த்துவதையும் உள்ளடக்கியது.