பிராந்திய அளவில் தட்டம்மை ஒழிப்பு நோக்கிய செயல்பாடு 2000 - 2019
November 26 , 2020
1698 days
703
- இது உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் ஆகியவற்றினால் வெளியிடப் பட்டுள்ளது.
- இந்த அறிக்கையின்படி, WHO பிராந்தியங்களில் ஆப்பிரிக்காவும் அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவும் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் மற்றும் இறப்புகளைக் கொண்டுள்ளன.
- உகாண்டா நாடானது தட்டம்மை இறப்புகளில் 100% அளவிலான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
- அதிக எண்ணிக்கையிலான பச்சிளங் குழந்தைகள் தட்டம்மை நோய்த் தடுப்பு மருந்தைப் பெறாத 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
- இந்தியாவானது மற்ற (மீதமுள்ள) 5 நாடுகளிடையே உலகின் மொத்த பாதிப்புகள் மற்றும் இறப்புகளில் பாதியளவு பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளது.
- நைஜீரியா, எத்தியோப்பியா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை இதர மற்ற நாடுகளாகும்.
Post Views:
703