பிரான்சினால் முகநூல், கூகுள் ஆகிய நிறுவனங்களுக்கு வரி விதிப்பு
July 6 , 2019 2230 days 1028 0
கூகுள், அமேசான் மற்றும் முகநூல் போன்ற இணையதள நிறுவனங்களின் மீது சிறிய அளவிலான, ஒரு முன்னோடி வரியை விதிக்க பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த மசோதாவானது தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனங்கள் வரி குறைவான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், தங்களது தலைமையிடங்களை அமைப்பதன் மூலம் வரி செலுத்துவதிலிருந்து தப்பித்துக் கொள்கின்றன. இந்த மசோதா இதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரான்ஸ் போன்ற நாடுகளில் தற்பொழுது அதிக அளவு விற்பனையைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனங்கள், அந்நாடுகளில் வரி செலுத்துவதில்லை.