TNPSC Thervupettagam

பிரிக்ஸ் கல்வித் திட்டம் 2026

September 15 , 2026 13 hrs 0 min 18 0
  • 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் புதுடெல்லி பிரகடனம், ஆரம்பப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்வி (ECCE) மற்றும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு (FLN) ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
  • பிரிக்ஸ் நாடுகள் சிறந்த நடைமுறைகளைப் பகிர்வது, தகுதிகளைப் பரஸ்பரம் அங்கீகரிப்பது, கல்விசார் இடப்பெயர்வு, டிஜிட்டல் எழுத்தறிவு மற்றும் கல்வியில் செயற்கை நுண்ணறிவின் (AI) பாதுகாப்பான மற்றும் நெறிமுறை சார்ந்த பயன்பாட்டை ஊக்குவிக்கும்.
  • பிரிக்ஸ் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) ஒத்துழைப்புக் கூட்டமைப்பு (BRICS-TCA), தகவல் பரிமாற்றம், வளப் பகிர்வு மற்றும் தொழிற்கல்வியின் கூட்டு வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும்.
  • மாறிவரும் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சிகளை வழங்கி, பணியாளர்களின் தயார்நிலையை மேம்படுத்துவதற்காகப் பிரிக்ஸ் நாடுகள் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தி TVET நிறுவனங்களைத் தொழில்துறைகளுடன் இணைக்கும்.
  • கல்வித் திட்டங்கள், உதவித்தொகைகள் மற்றும் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு அறிவு அமைப்புகளின் மீதான ஒத்துழைப்பு உட்பட, பிரிக்ஸ் வலையமைப்பு பல்கலைக்கழகம் (BRICS Network University) மூலம் ஒத்துழைப்பு தொடரும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்