இந்தியாவின் பிரிக்ஸ் தலைமையின் கீழ் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 2-வது பிரிக்ஸ் 2026 ஆம் ஆண்டு சுற்றுலா பணிக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தால் தொகுத்து வழங்கப்பட்டது.
இந்தியாவின் கருத்துருவான “Building for Resilience, Innovation, Cooperation and Sustainability” என்பதில் இது கவனம் செலுத்தியது.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சுற்றுலா, நிலையான மற்றும் பொறுப்பான சுற்றுலா, சுற்றுலா திறன் மற்றும் திறன் மேம்பாடு, மற்றும் சுற்றுலா பரிமாற்றங்கள் மற்றும் தடையற்ற பயண வசதி ஆகிய நான்கு முன்னுரிமைப் பகுதிகள் விவாதிக்கப் பட்டன.
இது 2026 ஆம் ஆண்டு மே 25 அன்று காணொளி வாயிலாக நடைபெற்ற 1 வது பிரிக்ஸ் 2026 ஆம் ஆண்டு சுற்றுலா பணிக்குழு கூட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரிக்ஸ் சுற்றுலா அமைச்சர்கள் கூட்டத்தில் ஜெய்ப்பூர் பிரகடனம் எனப்படும் 2026 ஆம் ஆண்டு பிரிக்ஸ் சுற்றுலா அமைச்சர்களின் அறிக்கை ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.
செயற்கை நுண்ணறிவால் (AI) செயல்படுத்தப்படும் சுற்றுலா, நிலையான சுற்றுலா, திறன் மேம்பாடு மற்றும் தடையற்ற பயணம் ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை ஜெய்ப்பூர் பிரகடனம் வழங்குகிறது, அதே நேரத்தில் சுற்றுலா முதலீடு, உள்கட்டமைப்பு மற்றும் மக்களுக்கிடையேயான பரிமாற்றங்களை ஊக்குவிக்கிறது.