TNPSC Thervupettagam

பிரிக்ஸ் பெண் அமைச்சர்களின் கூட்டம் 2026

July 13 , 2026 16 hrs 0 min 27 0
  • பெண்கள் தலைமையிலான மேம்பாடு மற்றும் பாலின சமத்துவத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, இந்தியாவின் 2026 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் தலைமையின் கீழ் கேரளாவின் கொச்சியில் பிரிக்ஸ் பெண் அமைச்சர்களின் கூட்டம் முடிவடைந்தது.
  • இக்கூட்டமானது பிரிக்ஸ் பெண்கள் பணிக்குழு கூட்டம் மற்றும் பிரிக்ஸ் பெண் அமைச்சர்களின் கூட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.
  • பிரிக்ஸ் பெண்கள் பிரிவின் கீழ் முதன்முறையாக ஒரு கூட்டு அறிக்கையை இக்கூட்டம் ஏற்றுக் கொண்டது.
  • வெற்றிகரமான கொள்கைகள் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பகிர்வதற்கான சிறந்த நடைமுறைகளின் பிரிக்ஸ் டிஜிட்டல் களஞ்சியம் மற்றும் நிறுவன ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துவதற்கான பிரிக்ஸ் டிஜிட்டல் திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல்கள் ஆகிய இரண்டு முன்னெடுப்புகளை இந்தியா அறிமுகப் படுத்தியது.
  • டிஜிட்டல் உள்ளடக்கம், பெண்கள் தொழில்முனைவு, நிதி அதிகாரமளித்தல், பருவ நிலை மீள்திறன், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் விவாதங்கள் கவனம் செலுத்தின.
  • இக்கூட்டமானது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் (MWCD) ஏற்பாடு செய்யப்பட்டது மற்றும் நிலையான வளர்ச்சியின் உந்துசக்தியாக பெண்கள் தலைமையிலான மேம்பாட்டை முன்னெடுப்பதற்கான பிரிக்ஸ் நாடுகளின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்