TNPSC Thervupettagam

பிரிக்ஸ் வேளாண்மைக் கூட்டமைப்பு 2026

June 13 , 2026 15 hrs 0 min 43 0
  • உலகளாவிய வேளாண்மைத் துறையில் உள்ள முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, இந்தியாவின் பிரிக்ஸ் தலைமையின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் வேளாண்மைக் கூட்டம் இந்தூரில் நடைபெற்றது.
  • இக்கூட்டம் உணவுப் பாதுகாப்பு, உழவர் நலன், ஊட்டச்சத்து மற்றும் பருவநிலைக்கு ஏற்ற திறன்சார் வேளாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
  • விவசாய வர்த்தகம், விநியோகச் சங்கிலிகள், டிஜிட்டல் வேளாண்மை, ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆகியவை குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
  • வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை (DA&FW) இக்கூட்டத்தை ஏற்பாடு செய்தது.
  • பிரிக்ஸ் அமைப்பில் தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா ஆகிய 11 உறுப்பு நாடுகள் இடம் பெற்றுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்