TNPSC Thervupettagam

பிரிவு 498A தொடர்பான வழக்குகள்

September 22 , 2025 3 days 68 0
  • பிரிவு 498A தொடர்பான வழக்குகளில் இரண்டு மாத 'அவகாச காலம்' அறிமுகப் படுத்தும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 2022 ஆம் ஆண்டு வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
  • இந்த அவகாச காலத்தில், எந்தக் கட்டாய நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதோடு மேலும் இந்த விவகாரம் குடும்ப நலக் குழுவிற்கு (FWC) பரிந்துரைக்கப் படுகிறது.
  • 2025 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப்பட்ட ஷிவாங்கி பன்சல் மற்றும் சாஹிப் பன்சல் வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
  • அவகாச காலம் ஆனது, நீதியை தாமதப்படுத்துவதாகவும் குற்றவியல் நீதி நிறுவனங்களின் சுயாட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
  • திருமணக் கட்டமைப்புகளில் பெண்களுக்கு எதிரான கொடுமையை நிவர்த்தி செய்வதற்காக 498A பிரிவானது முதலில் இயற்றப்பட்டது.
  • நீதிமன்றங்கள் ஆனது முன்னதாக முதற்கட்ட விசாரணை, கைது வழிகாட்டுதல்கள் (அர்னேஷ் குமார், 2014) மற்றும் பிணை ஆணை/ஜாமீன் தொடர்பான பாதுகாப்புகள் (சதேந்தர் குமார் அன்டில், 2022) போன்ற கருத்தாக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
  • இராஜேஷ் சர்மா (2017) வழக்கில் இதே போன்ற FWC மாதிரியானது, மனவ் அதிகாருக்கான (மனித உரிமைகள்) (2018) சமூக நடவடிக்கை மன்றம் என்ற வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வினால் ரத்து செய்யப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்